என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல் ஆலோசனைக் கூட்டம்"
- இந்தியாவில் 10 மாநிலங்களில் எனது ஆலோசனைகளை கேட்ட கட்சிகள் ஆட்சியில் இருக்கிறது.
- எனக்கு நிதி என்பது ஒரு பிரச்சினை இல்லை.
பாட்னா:
அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கான யுக்திகளை தாங்களே வகுத்துக்கொண்டு இருந்தன. தற்போது தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் வந்துவிட்டன. அதுபோன்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருபவர்தான் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர்.
பல்வேறு மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த கட்சிகளையும் வெற்றி பெறவைத்துள்ளார். அதற்காக அவர் பெறும் கட்டணம் குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்து வந்தன.
இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஆரம்பத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் பயணித்து வந்த பிரசாந்த் கிஷோர் பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகினார். தற்போது ஜன சுராஜ் (மக்கள் நல்லாட்சி) என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
பீகாரில் வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர், தராரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். பெலகஞ்ச் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள உங்களுக்கு (பிரசாந்த் கிஷோர்) நிதி எப்படி கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா. நான் தேர்தல் வியூக வகுப்பாளர். அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வகுத்து கொடுத்தால் அந்த கட்சியிடம் இருந்து கட்டணமாக ரூ.100 கோடிக்கும் அதிகமாக பெற்று இருக்கிறேன்.
இந்தியாவில் 10 மாநிலங்களில் எனது ஆலோசனைகளை கேட்ட கட்சிகள் ஆட்சியில் இருக்கிறது. எனவே எனக்கு நிதி என்பது ஒரு பிரச்சினை இல்லை. இந்த இடைத்தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக (ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம்) வேட்பாளர்களை நிறுத்தியுள்ளேன். அவர்களை வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாந்த் கிஷோர் தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்